search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி"

    • ஏரிக்கரைகள், சாலை யோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.
    • தென்னை கன்றுகள் உட்பட சில்வர் ஹூக் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரைகள், சாலை யோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் நடும் பணிகள் நடைபெற்றது.

    இதன் தொடக்கமாக காமன்தொட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட சப்படி அருகில் உள்ள தின்னூர் ஏரிகரையில் சில்வர்ஹூக், நல்லி, புங்கன் மற்றும் பாதாம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வன சரகர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்களை கொண்டு நடப்பட்டன.

    மேலும் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவே கானந்தன், ஜேம்ஸ்குமார், உமாசங்கர், காமராஜ், முருகன், வெங்கடேசன் மற்றும் சூளகிரி வனசரகர் தவமுருகன் மற்றும் ஊழியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மூலம் ஆரஞ்சு, சாத்துகுடி, பட்டர் புரூட், வாட்டர் ஆப்பிள், பாதாம், கொய்யா மற்றும் தென்னை கன்றுகள் உட்பட சில்வர் ஹூக் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சூளகிரி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சுமார் 3800 மரக்கன்றுகள் நட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    • 119 வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 21,480 மரங்களை நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காங்கேயம் :

    காங்கேயம் சுற்று வட்டாரங்களில் சுற்றுச்சூழல் நலன் மேம்படுத்தும் வகையில்பள்ளிகள், தோட்டங்கள்,கோவில் மற்றும் பொது வளாகங்க ளில் மக்களின் முழு ஒத்துழைப்புடன் காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    21,480 மரங்களை நட்டு பராமரிக்கும் பணியின் தொடர்ச்சியாக 119 வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காங்கயம், தாராபுரம் ரோட்டிலுள்ள காடையீஸ்வரா நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் டி.மகேஷ் குமார், காங்கயம் நகர் மன்ற தலைவர் என்.சூரிய பிரகாஷ், சாம்சன் சி.என்.ஓ.இன்டஸ்டிரீஸ் நல்லி எஸ்.மோகன் குமார், காங்கயம் சிவா ஏஜென்சி சிவசுப்பிரமணி, ஊதியூர் புளூ மெட்டல்ஸ் டி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னின்று தொடங்கி வைத்தனர். இதில் துளிகள் அமைப்பினர், பொதும க்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வனத்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
    • 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகத்தில் வனத்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருமகள் ஆலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமை தாங்கினார். வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் கணேசன், நீலகண்டன், வனராஜ் சிவா, சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனவர் மாசிலாமணி வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் பொறுப்பு வாசுகி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    நகர்மன்ற உறுப்பினர் மனோஜ், ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என்.விஜயகுமார் கலந்து கொண்டனர்.

    ×